நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய விண்ணுக்கு அனுப்பப்பட்ட ‘சந்திராயன் -3’ நேற்று வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் தற்போது விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்து சென்ற ரோவர் பிரக்யான் ஆய்வு பணிகளை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் விண்வெளி ஆராச்சி நிலையமான இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி அன்று இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடின உழைப்பில் உருவாக்கப்பட்ட சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது .
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக LVM MK 3 ராக்கெட்டில் அனுப்பட்ட 3900 கிலோ எடை கொண்ட சந்திராயன் 3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி பூமியின் சுற்றுப்பாதையை முடித்து நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது.
திட்டத்தட்ட 41 நாட்கள் பயணத்திற்கு பின் நேற்று மாலை சந்திராயன் 3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது .இந்நிலையில் சந்திராயன் 3 அடைந்த மாபெரும் வெற்றிக்கு திரைபிரபலன்கள் , அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்து சென்ற ரோவர் பிரக்யான் தந்து ஆய்வு பணிகளை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ரோவர் 14 நாட்கள் நிலவின் தரைப்பரப்பில் சென்று பல்வேறு ஆய்வகளை மேற்கொள்ள இருப்பதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.