இந்திய விண்வெளி ஆய்வு மையம், புவியை கண்காணிக்க, இ.ஓ.எஸ்., – 08 செயற்கைக்கோளை உருவாக்கி இருந்த நிலையில் இன்று இந்த செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
இந்தியாவின் பெருமைமிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, சந்திரயான் 3 திட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பின் தனது அடுத்த இலக்கான சூரியனை ஆய்வு செய்ய ‘ஆதித்யா எல்-1’என்ற விண்கலத்தை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி தீவிர ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஒருபக்கம் சந்திரயான் , ‘ஆதித்யா எல்-1’ போன்ற பெரிய ஆராச்சிகளும் மறுபக்கம் சிறிய செயற்கைக்கோள்களை தயாரித்து அதனை விண்ணுக்கு அனுபவத்திலும் இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது.
Also Read : போக்குவரத்து துறை மிகப் பெரிய நஷ்டத்தில் உள்ளது – அமைச்சர் சிவசங்கர் பகீர் பேட்டி..!!
அந்தவகையில் தற்போது இந்திய விண்வெளி ஆய்வு மையம், புவியை கண்காணிக்க, இ.ஓ.எஸ்., – 08 செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது.
இதை சுமந்தபடி, எஸ்.எஸ்.எல்.வி., – டி3 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து, சில தினங்களுக்கு முன் விண்ணில் பாயவிருந்த நிலையில் திடீரென ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ராக்கெட் இன்று (ஆக16) காலை 9: 17 மணி அளவில் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.