தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் நடைபெறும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரை தமிழக ஆளுநர் உரை நிகழ்த்தி தொடங்கி வைப்பது வழக்கம் ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சட்டப்பேரவைக்கு வரும் ஆளுநர் காலில் சுடுதண்ணீர் ஊற்றியது போல் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் சென்று விடுகிறார்.
அந்தவகையில் இன்று 2025 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடரை உரை நிகழ்த்தி தொடங்கி வைக்க வந்த ஆளுநர் வழக்கம் போல் வந்த வேகத்தில் காரில் ஏறிச்சென்றார். இதற்கு சட்டப்பேரவையில் தேசிய கீதம் படாமல் அவமதிப்பு செய்ததாக ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்துள்ள தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது :
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மரபின் அடிப்படையில் என்ன நிகழ்வு நடக்க வேண்டுமோ, அது நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதை மாற்ற வேண்டும் என்று ஆளுநர் ரவி நினைக்கிறார். அது முடியாது.
Also Read : விண்வெளியில் துளிர்விட்ட காராமணி பயிர் – மகிழ்ச்சி தெரிவித்த இஸ்ரோ..!!
59 பக்கத்தில் அரசின் சாதனைகளை, திட்டங்களை உரையாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை படிக்க வேண்டும் என்பதால் உரையை வாசிக்காமல் வெளியேறியுள்ளார். தேச பக்தியை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்ததுபோல, தேசிய கீதம் பிரச்னையை மீண்டும் எழுப்பியுள்ளார்.
தேச பக்தியில் தமிழ்நாட்டு மக்களவைவிட, ஆளுநர் பெரிய ஆள் இல்லை. தேசிய கீதத்தை அவமதித்ததே ஆளுநர் தான். அதற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.