ஜம்மு காஷ்மீர்(Jammu) சிறைச்சாலையில் டிஜி(DG) நேற்று இரவு மர்மமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.மேலும் இந்த கொலைக்கு டிஆர்எஃப் பொறுப்பேற்றதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று வெளியாகி பெரும் அதிர்வலைகைளை ஏற்படுத்தி உள்ளது.
57 வயதான ஹேமந்த் குமார் 1992ஆம் ஆண்டில் ஐபிஎஸ் ஆக பொறுப்பேற்றார்.ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இவர் ஜம்மு காஷ்மீரின் சிறைத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.
இதுவே ஜம்மு காஷ்மீரின் மிக உயரியப் பொறுப்பாகும். காவல்துறையில் உயர் பொறுப்பில் இருக்கும் நபர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்த ஹேமந்த் குமார் வீட்டில் பணியாற்றிய ஜசிர் என்ற நபர் தலைமறைவாகியுள்ளார். எனவே, இந்த கொலையில் அவருக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற நோக்கில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மேலும், காவல்துறை தரப்பு இந்த கொலையில் ஈடுபட்டவர்களின் அடையாளம் குறித்த தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.அதேவேளை, People’s Anti Fascist Force என்ற பயங்கரவாத அமைப்பு இந்த கொலைக்கு பொறுப்பேற்றுள்ளது.
Dead body of Shri Hemant Lohia DG Prisons J&K found under suspicious circumstances. First Examination of the scene of crime reveals this as a suspected murder case. The domestic help with the officer is absconding. A search for him has started.
— J&K Police (@JmuKmrPolice) October 4, 2022
சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாஜ் சிங், “இது மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு, ஹேமந்த்தின் உடலை கொலையாளி தீவைக்க திட்டமிட்டுள்ளார். ஆனால் அதை செய்வதற்குள் காவல்துறை வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளது. வீட்டில் பணிபுரிந்த ஜசிர் தலைமறைவாகியுள்ளார். அவரை தேடும் பணியில் நாங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம்” என்றார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த நிலையில் அக்டோபர் 3ஆம் தேதி மதியம் பாரமுல்லா வங்கி மேலாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதே நேரத்தில், அக்டோபர் 3 ஆம் தேதி இரவு, ஜம்மு காஷ்மீர் சிறை டிஜி படுகொலை செய்யப்பட்டார்.
முன்னதாக செப்டம்பர் 28 ஆம் தேதி உதம்பூரில் 8 மணி நேரத்தில் 2 குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகைக்கு முன்னும் பின்னும் இந்த சம்பவங்கள் ஜம்மு காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. காவல்துறையும், நிர்வாகமும் கலக்கம் அடைந்துள்ளன. இந்த சம்பவங்களுக்கு மத்தியில், பல்வேறு கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.