நடிகர் சூர்யா நடிக்க இருக்கும் ‘கர்ணா’ படத்தில் ஜான்வி கபூர்( janhvi kapoor) நடிக்கவிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சூரரைப்போற்று’ படத்திற்காக தேசிய விருது பெற்ற இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்தில் மிரட்டும் வில்லனாக சில நிமிட காட்சிகளில் நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கத்தில் பிரமாண்ட படைப்பான ‘கங்குவா’ படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து திஷா பட்டாணி மற்றும் பாபி டியோல் லீட் ரோல்களில் நடித்துள்ளனர்.
தற்போது கங்குவா படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், விரைவில் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம், சர்வதேச அளவில் ஒரே நேரத்தில் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தை முடித்துவிட்டு அவர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகும் ’புறநானூறு’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
https://x.com/ITamilTVNews/status/1759843970182750589?s=20
அதுமட்டுமின்றி சூர்யாவின் நடிப்பில் ‘கர்ணா’ என்ற பான் – இந்திய திரைப்படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது சூர்யாவின் நேரடி முதல் ஹிந்தி படமாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மகாபாரதத்தை பின்னணியாக கொண்ட இந்த படம் மிகவும் பிரம்மாண்டமாக 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜான்வி கபூர், சூர்யாவுடன் ஒரு ஹிந்தி படத்திலும், ராம் சரண் உடன் மற்றொரு படத்திலும் நடிக்கிறார் என்று அவரது தந்தையும், தயாரிப்பாளருமான போனி கபூர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் பிரபல நடிகையும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர்
( janhvi kapoor) , ஜூனியர் NTR உடன், ‘தேவரா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க : Ramanathapuram ஆட்சியர் அலுவலகம் நோக்கி மீனவர்கள் பேரணி
இந்த நிலையில் தான் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியின் போது, போனி கபூர் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.
இதனால் சூர்யாவின் ‘கர்ணா’ படத்தில் தான் ஜான்வி கபூர்நடிக்கவுள்ளார் தற்போது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.