உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நேற்று கோலாகலமாக வெளியான ஜவான் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகி அனைவரையும் ஆச்சிரயத்தில் ஆழ்த்தியுள்ளது .
தளபதி விஜயை வைத்து 3 சூப்பர் படங்களை இயக்கிய அட்லீயின் இயக்கத்தில் பாலிவுட் பாஷா ஷாருக்கானின் மிரட்டலான நடிப்பில் உருவான திரைப்படம் ஜவான் .
ரெட் சில்லிஸ் நிறுவனத்தின் தாராள பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக உருவான இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா,மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, யோகி பாபு , தீபிகா படுகோனே என பல உச்ச நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நேற்று கோலாகலமாக வெளியானது .
ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருந்து வந்த ஜவான் படத்தை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ் , நெகட்டிவ் என கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர் . இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் தற்போது வெளியாகி உள்ளது .
இப்படம் உலகளவில் 125 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகவும் இந்தியாவில் மட்டுமே ரூ. 75 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர் .