போதைப்பொருட்கள் கடத்தல் விவகாரத்தில் தன்னைப்பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததாகக் கூறி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு எதிராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில்எத்தனை வழக்குகள் போட்டாலும், அதனை எதிர்கொண்டு சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான ஜெயக்குமார் (jayakumar speech) பதில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “சி.எம். திடீர்னு இப்படி பன்னிட்டாரே..?”- இனி, போதையை பத்தி பேச முடியாதோ..?
திமுக ஆட்சிக்கு வந்த கடந்த மூன்று ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் மீது வழக்கு தொடர்வதையே மட்டுமே ஸ்டாலின் வேலையாக வைத்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக்கு உடன் தமிழக முதலமைச்சர் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தமிழக காவல்துறை தலைவர் ஆகியோர் நெருக்கமாக புகைப்படம் எடுத்துள்ளது குறித்து விளக்கம் அளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து வலியுறுத்தியும் இதுவரை அவர்கள் விளக்கம் அளிக்காமல் இருப்பதாகவும், அந்த விளக்கெண்ணைகளுக்கு விளக்கம் அளிக்க தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மடியில் கனம் இருப்பதால் தான் அவர்களுக்கு கனம் தெரிவதாகவும் ஜெயக்குமார் விமர்சித்தார்.
சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கின் முகம் மூடப்பட்டு அழைத்துச் செல்வது போல், அவருடன் தொடர்பில் இருந்தவர்களும், தமிழகத்தில் பலரையும் முகத்தையும் மறைத்து கைது செய்து அழைத்துச் செல்லும் நாள் விரைவில் வரும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் (jayakumar speech) செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.