Ram Temple inauguration -அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று ஜெயலலிதாவும் விரும்பியதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவில்:
அயோத்தியில் 7 ஏக்கர் பரப்பளவில் மூன்று மாடி அமைப்புகளுடன் பிரம்மாண்டமாக ராமர் கோவில் தற்போது கட்டப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 22ஆம் தேதி பால ராமர் சிலைக்கு உயிரூட்டும் பிராண பிரதஷ்ட நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடத்தப்பட்டது.
இந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல்வேறு திரையுலகினர்,
விளையாட்டு பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் என அனைவரும் பங்கேற்றனர்.இதில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நடத்தப்பட்டது.
இதையும் படிங்க :white statement-தொழில் முதலீட்டு விவரங்களை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!
அதனால் மீண்டும் தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி கிடைக்கும் என பாஜகவினர் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் வசந்த காலத்தை வரவேற்கும் வசந்த் பஞ்சமி விழா வருகின்ற பிப்ரவரி 14-ஆம் தேதி ராமர் கோவிலில் கொண்டாடப்பட இருக்கின்றது.
டிடிவி.தினகரன் கருத்து :
இந்த நிலையில் ,அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று ஜெயலலிதாவும் விரும்பியதாக டிடிவி.தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் மக்களவைத் தேர்தலுக்காக சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1752926495637663891?s=20
உறுதியான பிறகு, கூட்டணி குறித்த விவரங்களை வெளியிடுவோம் என்று தெரிவித்தார்.
தேர்தல் வெற்றி, தோல்விகளைத்தாண்டி ஓ.பன்னீர்செல்வத்துடன் அரசியல் ரீதியாக சேர்ந்து பயணிக்க முடிவு செய்துள்ளேன்.
நாட்டின் பிரதமரைத் தேர்வு செய்யும் கூட்டணியில் அமமுக இடம்பெறும். திமுககூட்டணியை பலமாக அமைத்தாலும், மக்கள் அவர்களுக்கு எதிராகத்தான் இருக்கிறார்கள்.
மேலும் அயோத்தியில் ராமர் கோயில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர் கேள்விக்கு,அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டதை, மதங்களைத் தாண்டி அனைவரும் வரவேற்றுள்ளனர்.
இது மகிழ்ச்சியான விஷயம். அயோத்தியில் ராமர் கோயில்( Ram Temple inauguration ) கட்ட வேண்டும் என்று ஜெயலலிதாவும் விரும்பினார்.இவ்வாறு டிடிவி.தினகரன் தெரிவித்தார்.