ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ரயில்வே சுரங்கப்பாலம் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
தன்பாத் மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 13.4 கிமீ தொலைவில் உள்ள பலியாபூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சத்தகுலி கிராமத்திற்கு அருகே இந்தச் சம்பவம் நடந்தது.
பிரதங்கந்தா மற்றும் சிந்திரி ரயில் பிரிவுக்கு இடையே கட்டுமானத்தில் உள்ள சுரங்கப்பாதையில் தனியார் ஒப்பந்ததாரர் ஒருவரால் பணியமர்த்தப்பட்ட 6 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
சரக்கு ரயில் அருகில் உள்ள தண்டவாளத்தை கடந்ததால் அந்த பகுதி உடைந்தது. சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் சிக்கி கொண்டவரை மீட்க முயற்சி செய்தனர்.ஆனால் கடுமையாக முயற்சி செய்தும் முடியவில்லை.
இதனை தொடர்ந்து ரயில்வே காவல் துறையினருக்கு தாவல் கொடுத்தனர்.இதனை தொடர்ந்து தகவல் அறிந்துரயில்வே மற்றும் நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கவும்,ரயில்வேயில் உள்ள தொழில்களை வழங்கவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.