ஜார்க்கண்டில் கடந்த மார்ச் 2016இல் அன்சாரி மற்றும் இம்தியாஸ் கான் ஆகியோரை கொடூரமாக தாக்கி அடித்துக் கொன்று தூக்கிலிட்ட குற்றத்திற்காக, கடந்த டிச. 2018 இல் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்த 8 பேருக்கு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
கால்நடை வியாபாரியான அன்சாரி (32) அவரது வணிக கூட்டாளியின் 11 வயது மகன் இம்தியாசும் இந்துத்துவவாதிகளான ‘பசு குண்டர்களால்’ தாக்கப்பட்டு ஜாபர் கிராமத்திற்கு அருகே உள்ள மரத்தில் தூக்கிலிடப்பட்டனர்.
இந்த நிலையில், தற்போது குற்றவாளிகளின் தண்டனையை ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
ஜார்க்கண்ட் சட்டசபை கும்பல் வன்முறைக்கு எதிரான மசோதாவை அறிமுகப்படுத்திய 4 மாதங்களுக்குப் பிறகு இது நடந்துள்ளது.
இதுகுறித்து அன்சாரியின் மனைவி சாய்ரா பீபி கூறுகையில்;‘எனக்கோ இங்குள்ள யருக்குமோ எந்த தர்மமும் தேவையில்லை. அவர்கள் எங்களை அங்கீகரிக்கவும் எங்களை மதிக்கவுமே வேண்டுகிறோம் ,” என்று தெரிவித்தார்.