நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, இந்தியாவின் பங்குவர்த்தக தலைநகரம் என அழைக்கப்படும் மும்பை டெலிகாம் வட்டாரத்தில் திடீரென முடங்கியுள்ளது.
இதனால், அவதியடைந்துள்ள வாடிக்கையாளர்கள் பலர், ரிலையன்ஸ் ஜியோ எண்களில் இருந்து வரும் அழைப்புகளை மேற்கொள்ள முடியவில்லை எனக் கூறியுள்ளனர்.
ஜியோ நெட்வொர்க்கில் இருந்து புதிய அழைப்புகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும் பிற எண்களில் இருந்தும் ஜியோவுக்கு அழைக்க முடியவில்லை என்றும் வாடிக்கையாளர்கள் டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளனர். ஜியோவில் இருந்து ஜியோவுக்கு கூட அழைப்புகள் செல்லவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரச்சனையானது மும்பையின் அனைத்து புறநகர் பகுதிகளிலும் இருப்பதாக கூறப்படுகிறது. கல்யாண், டோம்பிவிலி மற்றும் தானே பகுதிகளில் இருக்கும் ஜியோ வாடிக்கையாளர்கள் நெட்வொர்க் முடக்கத்தை எதிர் கொண்டுள்ளனர்.
இந்த சிக்னல் பிரச்சனை குறித்து ஜியோ இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.