Ram Mandir-அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி ஜிப்மர் மருத்துவமனை வரும் 22-ம் தேதி பிற்பகல் 2.30 வரை இயங்காது என நிர்வாகம் அறிவித்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் கோயிலில் குழந்தை ராமர் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டு திறப்பு விழா நடைபெறுகிறது.
இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் நரேந்திர மோடி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
ராமர் கோயில் கட்டப்படுவதை முன்னிட்டு, அயோத்தி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 263 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மொத்த மதிப்பு ரூ.30,923 கோடி ஆகும்.
இதையும் படிங்க :http://Dmk mla-”வேலைக்கார பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..” காவல் துறை விளக்கம் ?
இந்த கோயிலின் திறப்பு விழா, பல மாநிலங்களின் முக்கிய இடங்களில் நேரலை செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக 5 லட்ச லட்டுகள் அனுப்பப்பட உள்ளன.
மகாராஷ்டிரா மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள மஹாகாலேஷ்வர் கோவிலில் இருந்து 5 லட்ச லட்டுகள் அயோத்தி கோயிலுக்கு இன்று அனுப்பப்படுகிறது.
லட்டுகளை பேக் செய்யும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த கோயில், பொது மக்களின் தரிசனத்திற்காகஜனவரி 24ஆம் தேதியி லிருந்து திறக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் ,அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி ஜிப்மர் மருத்துவமனை வரும் 22-ம் தேதி பிற்பகல் 2.30 வரை இயங்காது என நிர்வாகம் அறிவித்துள்ளது.
https://x.com/ITamilTVNews/status/1748334769509982627?s=20
இது குறித்து புதுச்சேரியில் இயங்கும் ஜிப்மர் மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜிப்மர் நிறுவனம் வரும் 22-ம் தேதி மதியம் 2.30 வரை இயங்காது.
இந்நேரத்தில் வெளிப்புற சிகிச்சைப்பிரிவுக்கு நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எனினும், அவசர பிரிவு சேவைகள் இயங்கும். சிறப்பு கிளினிக்குகள் உட்பட அனைத்து மருத்துவமனை சேவைகளும் பிற்பகல் 2.30 மணிக்குப் பிறகு வழக்கம் போல் முழுமையாக செயல்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அயோத்தியில் ராமர் கோயில்(Ram Mandir) கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு புதுச்சேரியில் ஜனவரி 22 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.