தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமியை (jyoti nirmalasamy) நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக இருந்த பழனிகுமார், கடந்த மார்ச் 9-ம் தேதி, வயது மூப்பின் காரணமாக ஓய்வு பெற்றார்.
இதையும் படிங்க: ”திமுக-வை புகழ்ந்து பேசிய கஸ்தூரி..”சட்டென கிளம்பிய அர்ஜுன் சம்பத்!
இதையடுத்து, மாநில தேர்தல் ஆணையராக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமியைத் தேர்வு செய்து, ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பியிருந்தது.
ஆளுநரின் ஒப்புதலைத் தொடர்ந்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமியை(jyoti nirmalasamy) தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க:BREAKING | CAA-வை அமலுக்கு கொண்டு வந்தது ஒன்றிய அரசு!
அவர் திங்கள்கிழமை மாலை பதவியேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.