மதுரை மாவட்டம், புதுநத்தம் சாலையில் ரூ. 99 கோடி மதிப்பீட்டில் 213,288 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வரும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது .
மதுரையில் ஜூலை 15ம் தேதி நடைபெற உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழாவிற்கான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்நிலையில் அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ பொது நூலகத்தை விடவும் மிகப்பெரும் பரப்பில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி தற்போது செம வைரலாகி வருகிறது .
இதோ அந்த போட்டோக்களை நீங்களும் பாருங்க..