தமிழகத்தில் அம்மா உணவகங்களை போல் கூடுதலாக 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அம்மா உணவகம் என்ற மலிவு விலை உணவகம் தொடங்கப்பட்டது.
15 இடங்களில் தொடங்கப்பட்ட சென்னை மாநகராட்சியின் திட்டமான அம்மா உணவகத்தில், ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், என பலரும் குறைந்த விலையில் மூன்று வேளையும் உணவு உட்கொண்டு வந்தனர். மலிவு விலையில் திறக்கப்பட்ட அம்மா உணவகத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்த சூழலில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் ஏழை மக்கள் பசி தீர முதல்கட்டமாக 500 இடங்களில் கலைஞர் உணவகம் அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதே நேரம் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு தொடர்ந்து அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் அம்மா உணவகங்களை போல் கூடுதலாக 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.