“கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ. 1000.. வங்கி கணக்கிற்கு எப்போது வரும் தெரியுமா”?.. வெளியானது முக்கிய அறிவிப்பு!

கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ. 1000 எப்போது வழங்கப்படும் என்பது தொடர்பான முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

செப்டம்பர் 15-ந் தேதி பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

இதையடுத்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் ஜுலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெற்றது.

இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் ஆம் தேதி முதல் 14ஆம் தேதி 5 வரை நடைபெற்றது. இதன் மூலம் இதுவரை ஒரு கோடியே 75 இலட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் முதல் மாத பணம் ரூ.1000 எப்போது வங்கி கணக்கில் வரும் என்று முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி, செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்பட உள்ள கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கப்பட்டு 5 நாட்களில் அதாவது செப்டம்பர் 20ம் தேதி முதல் நேரடியாக வங்கி கணக்கில் மக்களுக்கு பணம் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து செப்டம்பர் 5ம் தேதிக்குள் இதுவரை விண்ணப்பம் செய்த அனைவருக்கும் விண்ணப்பங்களை இறுதி செய்து, 1 கோடி பயனர்களை தேர்வு செய்யும் முடிவை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது.

அதாவது, வரும் செப்டம்பர் 5ம் தேதிக்கு முன் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில் தேர்வானவர்களின் பெயர் பட்டியல் எடுக்கப்பட்டு, அவர்களுக்கு குறுந்செய்தி மூலம் தகவல் செல்லும்.

தேர்வு செய்யப்படாதவர்களுக்கும் அந்த குறுந்செய்தி செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total
0
Shares
Related Posts