Vijay Painting | “விஜய்யின் ரஞ்சிதமே ஸ்டைலில் முத்தம்” கொடுத்தவாறே விஜய் படத்தை வரைந்து ஓவியர் அசத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் சு.செல்வம் அவர்கள் நடிகர் விஜய் வருடத்தில் ஒரு படமாவது நடிக்க வேண்டி,
விஜய்யின் “ரஞ்சிதமே ஸ்டைலில் முத்தம் கொடுத்தவாறே” நடிகர் விஜய் உருவத்தை வரைந்தார்.
நடிகர் விஜய்க்கு சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ரசிகர்கள் பட்டாளம் உண்டு, ஒவ்வொருவரையும் தனது நடிப்பினாலும், புண் சிரிப்பினாலும் அனைவரையும் வசப்படுத்தியுள்ளார்.
நடிகர் விஜய் கடந்த சில வருடங்களாகவே அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார், அரசியலுக்கு வருவாரா, வரமாட்டாரா..
எனப் பலரும் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் தனது கட்சியின் பெயரை தமிழக வெற்றிக்கழகம் என அறிவித்திருக்கிறார் விஜய்,
அதோடு, இப்போது நடித்து வரும் படத்தை முடித்த பின் முழுமையான அரசியல் பணி என குறிப்பிட்டுள்ளார்.
கோட் படத்திற்குப் பின்னால் விஜய் நடிப்பாரா என்பது தெரியவில்லை.வருடா வருடம் விஜய் படத்திற்காகவே காத்திருக்கும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாகவே அமைந்துள்ளது,
நடிகர் விஜய் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள் வைக்கும் விதமாக ஓவியம், வருடத்திற்கு ஒரு படமாவது நடிகர் விஜய் நடிக்க வேண்டி ஓவியர் செல்வம் அவர்கள் ஒரு உள்ளங்கையில் கீழே ஊற்றாதபடி வண்ணம் வைத்து,
மற்றொரு கையால் வண்ணத்தை தொட்டு விஜயின் “ரஞ்சிதமே ஸ்டைலில் முத்தங்கள் கொடுத்து கொடுத்து முத்தம் கொடுத்தவாறே முத்தங்களை பறக்கவிட்ட கை விரல்களால் ” நடிகர் விஜய் படத்தை ஐந்து நிமிடங்களில் ஓவியர் செல்வம் வரைந்தார்.
இந்த ஓவியத்தை பார்த்த பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் நடிகர் விஜய் படத்தை(Vijay Painting) அவருடைய ஸ்டைலிலேயே வரைந்தது அருமை என்று ஓவியர் செல்வத்தை பாராட்டினார்கள்.