Kamal Haasan campaign Coimbatore : கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர், பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய கோவை மக்களவை தொகுதிக்கான முதல் தேர்தல் 1952ம் ஆண்டு நடந்தது.
இதுவரை இந்த தொகுதி 17 முறை தேர்தலை சந்தித்துள்ள நிலையில், காங்கிரஸ் 5 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் 4 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 3 முறையும், திமுக மற்றும் பாஜ தலா 2 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மொத்தம் 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி. ஆர். நடராஜன் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பாஜ வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் 3,92,007 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட மகேந்திரன் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 104 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கல்யாணசுந்தரம் 60 ஆயிரத்து 519 வாக்குகளும் பெற்றனர்.
இந்த தொகுதியில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.ஆர்.நடராஜன் நாடாளுமன்றத்தில் 5 விவாதங்களில் பங்கேற்றுள்ளதோடு 27 கேள்விகளையும் எழுப்பியுள்ளார். தொகுதி மேம்பாட்டு நிதியில் 106 பணிகளுக்கு நிதி ஒதுக்கியுள்ளார்.
அதில் ரேஷன் கடைகள், சமுதாய கூடம், நீர்த்தேக்க தொட்டிகள் கட்டுதல் ஆகிய பணிகளுக்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
இருந்த போதும், இம்முறை திமுகவே நேரடியாக போட்டியிடும் கோவை மக்களவை தொகுதியில் திமுக சார்பாக முன்னால் கோவை மேயர் கணபதி ராஜ்குமார்,
அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைமணி உட்பட 37 பேர் களம் காண்கின்றனர்.
தற்போது, மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓரிரு தின்ங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் தங்கள் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அனல் அடிக்கும் வெயிலிலும் மனம் கலங்காமல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பல்லடம் எம்ஜிஆர் சாலையில் பிரசாரம் மேற்கொண்டார் Kamal Haasan campaign Coimbatore.
அப்போது அவர், “இது, குரோதி ஆண்டு என்று சொல்வார்கள். எந்த குரோதமும் இல்லாமல் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட பல்லடம் என்றும் அவ்வாறே இருக்கவேண்டும்.
இதையும் படிங்க : மீண்டும் பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்? லிஸ்ட் போட்டு அலறவிட்ட வானதி!
பல்லடம் பகுதியில், விசைத்தறி, ஆயத்த ஆடை, பிராய்லர் கோழி வளர்ப்பு, விவசாயம் என நான்கு தொழில்கள் முன்னணியில் உள்ளன. ஆனால், ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பால் இந்த தொழில்கள் முன்புபோல் இல்லை. கடும் சரிவை நோக்கி செல்கிறது.
இது, வேதனை தருகிறது. இதுபோல், நன்றாக ஓடிக்கொண்டிருந்த பல வண்டிகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் நின்றுபோய்விட்டது. மக்களுடன் ஒன்றாத அரசாக, ஒன்றிய பாஜ அரசு உள்ளது.
ஜிஎஸ்டி வரி கொங்கு மண்டலத்தை கொஞ்சம் அழித்துவிட்டது. இல்லை என்று யாராலும் சொல்ல முடியாது. இந்த ஜிஎஸ்டி வரும்போது, நான் அன்றே குரல் கொடுத்தேன்.
சினிமா துறையை அது வெகுவாக பாதிக்கும் என்று அன்றே சொன்னேன். பெரும்பாடு பட்டு, ஆதிக்க சக்தியாக இருந்த கிழக்கிந்திய கம்பெனியை நம் நாட்டைவிட்டு, அனுப்பி வெச்சோம். ஆனால், இப்போது ‘நார்த் இந்தியா கம்பெனி’ வந்து பாடாய் படுத்துகிறது.
இங்கே நீங்கள் எதிர்கொள்ளும் எந்த பிரச்னை பற்றியும் ஒன்றிய பாஜ அரசுக்கு கவலை இல்லை. அவர்களுக்கு வேண்டிய, ஒருசில பெரும் தொழிலதிபர்களுக்கு மட்டுமே சலுகை தந்து கொண்டிருக்கிறார்கள், இது நிஜம்.
பல்லடம் போன்ற நகரங்கள், உலக தரத்திற்கு முன்னேறி செல்லும்போது, அதை பின்தள்ளியது அந்த ஜிஎஸ்டி வரிதான். பங்களாதேஷ் இப்போது நம்மை முந்திவிட்டது. அங்கே, ஜிஎஸ்டி வரி, நம்மைவிட குறைவு. பெட்ரோல், டீசல் விலையும் நம்மைவிட குறைவு.
பங்களாதேஷில் இருந்து துணி, மணியை இறக்குமதி செய்து, இங்கே நம் தொழிலை அழித்து விட்டார்கள். பணம், மதிப்பிழப்பு செய்து, கருப்பு பணத்தை எல்லாம் காணாமல் செய்துவிடுவோம் என்றார்கள். அதை நம்பி, நானும் ஒரு பாராட்டு கடிதம் போட்டேன்.
ஆனால், என்ன ஆச்சு…? அந்த பாராட்டு கடிதத்தை, 2 மாசம் கழித்து வாபஸ் வாங்க வேண்டியதாயிற்று. இந்திய பெண்கள் ஜனத்தொகையில், 43 சதவீதம் பெண்கள் தமிழகத்தில் வேலைக்கு போகிறவர்கள்.
இந்த திராவிட மாடல், நல்ல மாடலா? இல்லையா? வரும் 2047-ல் உலக வல்லரசாக இந்தியா மாறும் என மார்தட்டுகிறார்கள். ஆனால், இன்றைய நிலையில், 35 சதவீத குழந்தைகள், அரை பட்டினியாக உள்ளனர்” என்று பேசி திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்.
கோவை தொகுதியில் பல இடங்களிலும் பேசிய அவர், தொழிலாளர்களும் , முதலாளிகளும் நிறைந்த அங்கு ஜிஎஸ்டி வரியால் அனைவருமே பாதிக்கப்பட்டு இருப்பதாக செல்லும் இடங்களில் எல்லாம் பேசியதும் குறிப்பிடத் தக்கது.
இதையும் படிங்க : வெளியாது சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவு! – முதல் 3 இடங்களை பிடித்தது யார்?