ITamilTv

இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார்.. கமல் எழுதிய இரங்கல் கடிதம்!

Spread the love

பழம்பெரும் இயக்குனர் கே.விஸ்வநாத் (k viswanath) உடல் நலக்குறைவால் காலமானார். அவரது, மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தமிழ்,தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் எண்ணற்ற வெற்றிப்படங்களை கொடுத்த மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத். அவருக்கு வயது 92.

தமிழில் இயக்குனர் கே.விஸ்வநாத் (k viswanath) இயக்கிய “சலங்கை ஒலி”,
“சிப்பிக்குள் முத்து” ஆகிய படங்கள் காலம் கடந்து இன்றளவும்
கொண்டாடப்படுகின்றன. இந்த இரண்டு படங்களிலுமே நாயகனாக நடித்தது கமல்ஹாசன் தான்.

k viswanath

கே.விஸ்வநாத் சிறந்த இயக்குனராக மட்டுமல்லாமல், சிறந்த நடிகராகவும் திகழ்ந்தார். தமிழில் கமலின் ‘குறுதிப்புனல்’, விஜய்யுடன் ‘பகவதி’, அஜித்தின் ‘முகவரி’, தனுஷுடன் ‘யாரடி நீ மோகினி’ போன்ற படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார்.

நடிகர், இயக்குனர், ஆடியோ கிராபர் என பன்முகத்திறமை கொண்டவராக இருந்த கே.விஸ்வநாத் 6 முறை தேசிய விருதையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உடல் நலக்குறைவால் உயிரிழந்த இயக்குனர் கே.விஸ்வநாத்துக்கு இந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

கே.விஸ்வநாத்தின் மறைவு இந்திய திரையுலகுக்கே பேரிழப்பாக பார்க்கப்படும் நிலையில், கே.விஸ்வநாத்தின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் எழுதிய அந்த இரங்கல் கடிதத்தில், “கலாதபஸ்வி கே.விஸ்வநாத் அவர்கள், வாழ்வின் திருவுருவத்தையும், கலையின் அழியாத தன்மையையும் முழுவதுமாக புரிந்துகொண்டவர். இதனால், அவரது படைப்புகள் காலம் கடந்து கொண்டாடப்படும். அவரது கலை படைப்புகள் என்றென்றும் வாழும். இப்படிக்கு உங்களின் தீவிர ரசிகன் கமல்ஹாசன்” என அந்த கடிதத்தில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.


Spread the love
Exit mobile version