Farmers Protest Delhi | விவசாயிகள் மீது காவல்துறை கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு கனிமொழி எம்.பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த 2020 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓராண்டுக்கும் மேல் இந்த போராட்டம் நீடித்த நிலையில், மத்திய அரசு வேளாண் விளை பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்த சட்டம் கொண்டு வர
வேண்டும் என்ற நிபந்தனை விதித்தது .இதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
ஆனால், மத்திய அரசு வாக்குறுதி அளித்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி, மீண்டும் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
மேலும் டெல்லி நோக்கி பேரணி செல்ல சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்தன.
இதையும் படிங்க: விவசாயிகள்போராட்டம் இணையதள Service Termination
அதனை ஏற்று, பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களுடன் டெல்லியை நோக்கி புறப்பட்டனர்.
இந்த சூழலில் ,விவசாயிகளின் பேரணி டெல்லி செல்வதை தடுக்க டெல்லி எல்லைப் பகுதிகளான சிங்கு, திக்ரி, காசிப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் பாதுகாப்பு படையினர் மற்றும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுமட்டுமில்லாமல் டெல்லி எல்லைகளில் கன்டெய்னர்கள், போலீஸ் வாகனங்கள், ராட்சத கான்கிரீட் சுவர்கள் வைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டு சுற்றிலும் முள்வேலிகள் போடப்பட்டுள்ளன.
விவசாயிகளின் வாகன டயர்களை பழுதுப்படுத்தும் வகையில் தரையில் ராட்சத ஆணிகள் அடித்து வைக்கப்பட்டுள்ளன.
இத்தனையும் எதிர்த்து விவசாயிகள் தங்களது வாகனங்களை எதிர்த்துச் சென்றால் அதனை எதிர்க்கும் வகையில் டயர்களை குத்திக் கிழித்து விட்டு திரும்பும் எந்திரங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1757738737092399181?s=20
ஆனாலும் விவசாயிகள் தடுப்புகளை தகர்த்தெறிந்து முன்னேறி வருகிறார்கள்.இந்த நிலையில் நேற்று இரவு முழுவதும் கண்ணீர் புகை குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் ஹரியானா மாநிலம் சிங்கு எல்லைக்கு உட்பட்ட பகுதியில் விவசாயிகள் வராமல் தடுக்க கிராமப்புற சாலைகளில் பள்ளங்கள் தோண்டி வருகிறது.
இத்தகைய கொடூரத் தாக்குதலுக்கு விவசாயிகள் சங்கம் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு கனிமொழி எம்.பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“2021ல் அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால், விவசாயிகள் டெல்லி நோக்கி (Farmers Protest Delhi) பேரணியாகச் சென்றுகொண்டிருக்கின்றனர்.
அவர்கள் குற்றவாளிகள் அல்ல. அவர்களின் மீது காவல்துறை கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
காவல்துறையின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு வன்மையான கண்டனங்கள்.
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.