மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் இல்லத்திற்கு திமுக எம்.பி. கனிமொழி தாயார் ராஜாத்தி அம்மாளுடன் சென்று அஞ்சலி (Tribute) செலுத்தி உள்ளார்.
நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி காலை உயிரிழந்தார்.
சினிமா அரசியல் என இரண்டிலும் கொடிகட்டி பறந்த கேப்டன் விஜயகாந்தின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் சோக கடலில் மூழ்கடித்தது .
இதையடுத்து கேப்டனின் உடலுக்கு நடிகர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் நேரில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய செலுத்தினர் .
விஜயகாந்த் உடலுக்கு ரஜினி, கமல், விஜய், இளையராஜா என பல்வேறு திரைப் பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் விஜயகாந்தின் நினைவிடத்தில் அவரது ரசிகர்கள் தொண்டர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் கேப்டன் விஜயகாந்தின் இல்லத்திற்கு
இன்று கண்ணீர் மல்க நடிகர் ராதா அஞ்சலி செலுத்தியுள்ளார்.திமுக எம்.பி. கனிமொழி தாயார் ராஜாத்தி அம்மாளுடன் சென்று இன்று அஞ்சலி செலுத்தி உள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் விஜயகாந்தின் இல்லத்திற்கு வந்த திமுக எம்.பி.கனிமொழி விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார் .
கனிமொழி அவர்களுடன் அவரது தாயார் ராஜாத்தி அம்மாளும் விஜயகாந்தின் உருவ பாடதிக்ரு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதேபோல் நடிகர் சிலம்பரசனும் கேப்டன் விஜயகாந்தின் அவர்களின் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து கேப்டனின் திருவுருவ படத்திற்கு (Tribute) மலர் தூவி அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார் .
Also Read : https://itamiltv.com/venkat-prabhu-shared-the-last-pic-taken-with-bhavatharini/
திரை வாழ்க்கையிலும் நிஜ வாழ்க்கையிலும் ஒரு ஹீரோவாக வாழ்ந்த சென்ற கேப்டன் விஜயகாந்த் கட்டி காத்த கட்சியும் அவர் விட்டு சென்ற பணிகளையும் அவரது குடும்பத்தினர் முறைப்படி செய்வார்கள்.
சண்முக பாண்டியனின் திரை பயணத்திற்கு எங்களால் முடிந்த அத்தனையும் நாங்கள் செய்ய தயாராக உள்ளோம் என லாரன்ஸ் சிம்பு உளப்பட பலரும் தெரிவித்துள்ளனர்.