பேருந்து பயணத்தில் பாட்டுக் கேட்பவர்களா நீங்கள்? – நீதி மன்றத்தின் அதிரடி உத்தரவு!

karnataka-high-court-bans-loud-music-on-public-buses
karnataka high court bans loud music on public buses

பேருந்துகளில் பயணம் செய்யும் போது சக பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் அதிக சத்தமாக பாட்டு கேட்க தடை விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பேருந்தில் பயணம் செய்யும் போது மொபைல் போன்களில் ஸ்பீக்கரில் படல்கள் கேட்பது, வீடியோக்கள் பார்ப்பது வழக்கமான ஒன்றாகி உள்ளது. இது சக பயணிகளுக்கு இடையூறாக இருக்குமா? என்பதை பலரும் யோசிப்பது இல்லை.

இதனால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், பேருந்தில் பயணிக்கும் போது, சத்தமாக பாட்டுக் கேட்கவும், வீடியோ பார்க்கவும் தடை விதிக்கக் கோரி, கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

karnataka-high-court-bans-loud-music-on-public-buses
karnataka high court bans loud music on public buses

இந்த மனு, கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், பேருந்தில் பயணம் செய்யும் போது, மொபைல் போன் ஸ்பீக்கரில், அதிக சத்தம் வைத்து பாட்டு, வீடியோக்கள் பார்க்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது.

மேலும் நடத்துனர்கள் இது குறித்து பயணிகளுக்கு அறிவுத்த வேண்டும் என்றும், இந்த அறிவுறுத்தலை மீறும் பயணியை பேருந்து ஊழியர்கள் தாராளமாக பேருந்தில் இருந்து வெளியேற்றலாம் என்றும் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

 

Total
0
Shares
Related Posts