கர்நாடகாவில் Karnataka மங்களூரு மின்சார வாரியத்தின் உயரதிகாரியாக பணியாற்றி வருபவர் உமா சங்கரி.
உமா சங்கரி அவரது 87 வயதாகும் மாமனார் பத்மநாப சுவர்ணா என்பவரை இரக்கமின்றி கொடூரமாக தாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் முதியவர் பத்மநாப சுவர்ணாவுக்கு முகம் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிகிச்சைக்காக அவர் மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் போது பதிவான சி.சி.டி.வி. காட்சிகளை உமா சங்கரியின் கணவர் கண்டுபிடித்த நிலையில், அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பாக பாதிக்கப்பட்ட முதியவரின் மகள் உமாசங்கரி மீது கங்கனாடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் எஃப்ஐஆர் பதிவு செய்ததால், கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் உமா சங்கரி கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருப்பதாவது..
கடந்த 9-ந்தேதி அன்று 87 வயதாகும் முதியவர் பத்மநாப சுவர்ணா தடி ஒன்றை வைத்து கொண்டு, வீட்டிற்குள் நடந்து வருகிறார். அப்போது அவரது மருமகளுடன் எதோ பேசுகிறார்.
அதற்கு ஆத்திரமடைந்த உமா சங்கரி மாமனாரை, அவர் நடந்து செல்ல உதவும் அந்த நீண்ட வைத்து கடுமையாக தாக்குக்கிறார்.
அவரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபடுகிறார். இப்படி தொடர்ந்து தாக்கியதில், வலி பொறுக்காமல் அந்த முதியவர், அடிக்க வேண்டாம் என கெஞ்சுகிறார்.
மருமகள் தன்னை அடிக்காமல் தடுக்க முற்படுகிறார். ஆனால், இன்னும் ஆத்திரமடைந்த மருமகள் அவரை தரையில் தள்ளி விடுகிறார். இதில், கீழே விழுந்த அந்த முதியவர் சோபாவின் ஓரத்தில் போய் முட்டி கொண்டார்.
இதன்பின்னரும் ஆத்திரம் அடங்காமல், வீட்டுக்குள்ளேயே கோபத்துடன் முன்னும் பின்னும் நடந்து செல்லும் அந்த பெண், மீண்டும் திரும்பி வந்து, வாசல் கதவை பூட்டி விட்டு, மீண்டும் தடியை எடுத்து, அவரை அடிக்க செல்கிறார். ஆனால், இந்த முறை அவரை அடிக்காமல் விட்டு விட்டு அங்கிருந்து வீட்டிற்குள் செல்கிறார்.
பின்னர், அந்த முதியவர் வலியால் முனங்கியபடி இருக்கிறார். இந்த சம்பவத்தில் மருமகள் கீழே தள்ளி விட்டதில் அவருக்கு முகம் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் வீட்டின் சிசிடிவி காட்சிகளை உமா சங்கரியின் கணவர் பார்த்த போது இந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதியவரின் மகள் அளித்த புகாரின் பேரில், உமா சங்கரியை Karnataka போலீசார் கைது செய்தனர். அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.