கர்நாடகாவில் தனியார் கவிழ்ந்த விபத்தில் 4 மாணவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்து உள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் பாவகடா – ஒய் ஒசக்கோட்டை இடையே தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. காலை நேரங்களில் இந்த ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உட்பட 80 பயணிகளுடன் பேருந்து சென்று உள்ளது. மேலும், பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தின் மேல் அமர்ந்திருந்து பயணித்ததாக கூறப்படுகிறது.
இந்த தனியார் பேருந்து பாவகடா தாலுகா, பளவள்ளி டவுன் அருகே உள்ள ஏரி மீது சென்று கொண்டிந்த போது ஓட்ருனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்கு உள்ளானது. இந்த பேருந்து விபத்தில் பேருந்தில் பயணித்த 4 மாணவர்கள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களின் உதவியுடன் பேருந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். மேலும் இந்த விபத்தியில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும் பேருந்து விபத்தில் உயிரிழந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து அறிந்து விரைந்து வந்த அம்மாட்ட ஆட்சியர் வந்து பணியை தீவிரப்படுத்தினர்.