காங்கிரஸ் கட்சி வெற்றி முனைப்புடன் உள்ள நிலையில் கர்நாடக முதல்வர் வேட்பாளர் பட்டியலில் சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவி வரும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் 224 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அந்த வகையில் 11.45 மணி நிலவரப்படி காங்கிரஸ்- 129 இடங்களையும், பாஜக- 66,மஜத-22,பிற 07 இடங்களையும் பெற்றுள்ளது.
இந்த நிலையில் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்வர் பதவிக்கான டி.கே. சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா இவர்களில் யார் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து, காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன் சித்தராமையா தான் முதல்வராக வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மறுபுறம் tsk சிவக்குமார் முதல்வராக வேண்டுமென கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.