karthi chidambaram-ராமாயணத்தில் ராமர் தீவிரமான அசைவப் பிரியர் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகை நயன்தாரா , ஜெய் சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் தான் அன்னபூரணி.
இந்தப் படம் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்த படத்தில் நடிகர் ஜெய், கடவுள் ராமர் குறித்து பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதில் ,ராமர் அசைவம் சாப்பிட்டதாக ராமாயணத்தை மேற்கோள் காட்டி பேசும் வசனத்திற்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதையடுத்து,அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் இதுபோன்ற பேச்சு எழுந்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில்,ராமாயணத்தில் ராமர் தீவிரமான அசைவப் பிரியர் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read :https://x.com/ITamilTVNews/status/1745696747354271817?s=20
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..
வால்மீகி எழுதிய இராமாயணத்தில் பல இடங்களில்
ஸ்ரீராமன் தீவிரமான அசைவப் பிரியர் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இராமன் வனவாசம் போக வெண்டும் என்ற நிலைவந்த போது இராமன் மெத்த வருத்தத்தோடு தன் தாயாரிடம் சொன்னான். ‘
அம்மா நான் இராஜாங்கத்தையும் பரிபாலனத்தையம் இழக்க வெண்டும். மன்னர்களுக்கே உரித்தான எல்லா சுகங்களையும் இழக்க வேண்டும்.
சுவை மிகுந்த இறைச்சி உணவுகளையும் இழக்க வேண்டும்.
அயோத்தியா காண்டம் 20,26,94 ஆகிய அத்தியாயங்கள் இராமன் மது, மாமிசம் இவைகளை உட்கொண்டவனே!
ராஜ ரிஷிகளின் சம்மதத்தோடு நடைபெற்ற வேட்டையாடும் பழக்கம் உலகின் வேறு எவற்றாலும் வெல்ல முடியாததாக இருந்துள்ளது.
வேட்டையில் அவனுக்கிருந்த ஆர்வம், மாமிசம் உண்பதில் அவனுக்கு இருந்த அதீதமான விருப்பத்தையே காட்டுகிறது.
Also Read :https://itamiltv.com/india-one-nation-one-election-mamata-banerjee-protests/
சகோதரர்கள் (ராமன், லட்சுமணன்) இரவுப் பட்டினி, பசியால் வாடினர். வளர் பருவத்தில் இருந்த அவர்களின் (ராமனுக்கு அப்போது வயது 17 தான்) வலுவான உடல் வழக்கமான உணவுக்காக ஏங்கியது.
காட்டில் இருக்கும் நிலை தூண்டவே, நான்கு விலங்குகளை வேட்டையாடிக் கொன்றனர்;
ஒரு காட்டுப் பன்றி, புள்ளிமான், சாம்பார் மான், ருரு (எனும் ஒருவகை விலங்கு) ஆகியவற்றைக் கொன்று அவற்றின் மாமிசத்தை எடுத்துச் சமைத்து ஒரு மரத்தடியைத் தம் விடாக்கித் தின்றனர்.
அயோத்யா காண்டம். சர்க்கம் 52, சுலோகம் (102)
சித்திர கூடத்தில் ராமனுடன் காட்டாற்றுக் கரைகளில் உலவி வந்த சீதையைத் திருப்திப்படுத்த மாமிச உணவைக் கொடுத்து ராமன் கூறினான், “இது ஊட்டம்மிக்க உணவு, ருசியான, திருப்பத்தைத் தரக்கூடியது
அயோத்யா காண்டம், சர்க்கம் 96 சுலோகம் 1
ராமனிடம் கபந்தன் சொன்னவற்றின்படி ‘கி போன்ற மாமிசம் மிக்க நீர்ப் பறவைகளும், மீன்களும் ராமனுக்கு மிகவும் பிடித்தமானவை.
என்று கம்பராமாய பாடல் சொல்வதாகவும் கார்த்தி சிதம்பரம்(karthi chidambaram) தெரிவித்துள்ளார்.