பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விவாத நிகழ்ச்சியான தமிழா தமிழா நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக இயக்குநரும் நடிகருமான கரு பழனியப்பன் தெரிவித்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் விலகுவதற்கான காரணம் வெளியாகி உள்ளது.
கடந்த 2003 ஆம் ஆண்டு ஸ்ரீ காந்த், சினேகா நடிப்பில் வெளியான பார்த்திபன் கனவு திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கரு பழனியப்பன். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததுடன் மாநில அரசு சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து விஷாலை வைத்து சிலப்பரிகாரம். சேரனை வைத்துப் பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட படங்களை இயக்கிய கரு.பழனியப்பன் மந்திரப்புன்னகை படத்தில் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார்.
முன்னதாக புள்ள குட்டிக்காரன், துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதைத் தொட்டு, பூவெல்லாம் உன்வாசம், ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார் கரு பழனியப்பன்.
இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகப் படங்களை இயக்காத கருப்பாளனியப்பன் பிரபல தனியார் தொலைக்காட்சியில் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் .
இந்த நிகழ்ச்சியில் மக்கள் பேசத் தயங்கும் விஷயங்கள் வைத்துப் பேச வைத்து சமூகத்திற்குயெடுத்து சொல்லும் நிகழ்ச்சி இது என்று நேர்காணல் ஒன்றில் சொல்லியிருப்பார்.
அதன்படி ஒவ்வொரு வாரமும் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைக் கொண்டு இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும். மேலும் தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்ததன் மூலம் இந்த நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியிலிருந்து கரு பழனியப்பன் தகவல்கள் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாகக் கரு பழனியப்பன் தனது டிவிட்டர் பக்கத்தில்,
https://twitter.com/karupalaniappan/status/1633054940536143872?s=20
எங்கெங்கோ இருந்து பிறந்தநாள் வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் நன்றி! அன்பு!! முத்தங்கள் !!! இப்படி முகம் அறியா தோழமைகளின் அன்பும், ஆசிரியர்களின் அறிவுமே என்னை துணிவுடன் முடிவெடுக்க, வழிகாட்டி இருக்கிறது.
தமிழ் பரப்பில் தளம் அமைத்துக் கொடுத்த ஜீ தமிழ் உடனான நான்கு வருட தமிழா தமிழா” பயணம் இனிதே முடிவுக்கு வந்தது..சமூக நீதி, சுயமரியாதை. திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில், அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது!
நன்றி @zeetamizh @zee5tamil @sijuprabhakaran @poongundran.ganesan… உடன் நின்ற அனைவருக்கும் மீண்டும் அன்பு! நன்றி! முத்தங்கள்! எளியோரின் குரலாய் ஒலிக்க, இன்னும் பரந்துபட்ட தளத்தில், விரைவில் சந்திப்போம் என்று பதிவிட்டு உள்ளார்.