12ஆம் வகுப்பு பொது தேர்வு நாளை தொடங்க உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் https://twitter.com/mkstalin/status/1634743515451371520?s=2012 வகுப்பு மாணவர்கள் எந்த பயமும் இல்லாமல் பொதுத்தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். மேலும் நீங்கள் படிக்கும் புத்தகத்திலிருந்து தான் கேள்வி வரப்போகிறது. உங்களுக்கு தன்னம்பிக்கையும் மனவுறுதியும் தான் தேவை. அது இருந்தாலே நீங்கள் பாதி வெற்றி பெற்றதாகும்.
பொதுத்தேர்வை எதிர்கொள்ளவுள்ள என் பேரன்புக்குரிய மாணவர்களே! #AllTheBest pic.twitter.com/QE8FiAFieW
— M.K.Stalin (@mkstalin) March 12, 2023
தேர்வு என்பது உங்களை பரிசோதிக்க அல்ல. உங்களை உயர்த்தி அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல தான். அதனால் எந்த தயக்கமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளுங்கள். தேர்வை கண்டு பயம் வேண்டாம். பாடங்களை ஆழ்ந்து புரிந்து படியுங்கள். விடைகளை தெளிவாக முழுமையாக எழுதுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்அந்த வெற்றிக்காக உங்களது பெற்றோரும் ஆசிரியரை போல முதல்வராக இல்லாமல் உங்கள் குடும்பத்தில் ஒருவராக வாழ்த்தி உங்கள் வெற்றிக்காக் காத்திருக்கிறேன் ALL THE BEST என்று தெரிவித்துள்ளார்.