கரூரில் (Karur) கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதை குடும்பத்தினர் மறைத்து தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வாகன விபத்துக்களால், உடல்நிலை சரியில்லாமல் ஏற்படும் உயிரிழப்புக்கள் ஒரு புறம் இருக்க, தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களும் நடைபெறுவதை,
செய்திகளிலும், சமூக வலைத்தளங்களிளும் பார்க்க முடிகிறது.
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் அந்த மாணவியின் குடும்பத்தினர் தங்கள் மகள் இறந்த சம்பவத்தை காவல்துறைக்கு தெரிவிக்காமல் மறைத்து தீ வைத்து எரித்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம், (Karur) குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி. 55 வயதான இவருக்கு தாயாரம்மாள் என்ற மனைவியும், இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
இளைய மகள் சுபா ஹரிணி. 19 வயதான ஹரிணி கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
https://x.com/ITamilTVNews/status/1750834489868386704?s=20
இதை பார்த்து அதிச்ர்சியடைந்த பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை சுடுகாட்டுக்கு கொண்டு சென்று தகனம் செய்துள்ளனர்.
இதையும் படிங்க : C.M stalin இன்று இரவு ஸ்பெயின் பயணம்!
இந்த தகவலை அறிந்த லாலாப்பேட்டை போலீசார், சுடுகாட்டில் எரிந்த உடலை தண்ணீர் ஊற்றி, உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கல்லூரி மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதை குடும்பத்தினர் மறைத்து தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.