மோடி தலைமையிலான பாஜக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்துவோம் என ஆம் ஆத்மி தொண்டர்கள் மத்தியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ( Kejriwal ) தெரிவித்துள்ளார்
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், 50 நாள்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக 21 நாள்களுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து திகாா் சிறையில் இருந்து வெளியில் வந்த கெஜ்ரிவால் ஆம் ஆத்மி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது :
எங்களை சிறைக்கு அனுப்பிவிட்டு, நீங்கள் வெற்றி பெற முடியாது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் தொடங்கி உள்ளோம்.
Also Read : சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன்..!!
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்துவோம். எல்லா கட்சிகளையும் அழித்துவிட பாஜக நினைக்கிறது.
ஆம் ஆத்மி கட்சியை அழிக்க முடியாது என்பதற்கு இங்கு திரண்டுள்ள தொண்டர்களே சாட்சி. ஆம்ஆத்மி கட்சியை பிரதமர் மோடி நசுக்க நினைக்கிறார்.
ஆம்ஆத்மி கட்சி 2 மாநிலங்களில் ஆட்சியில் உள்ள சிறிய கட்சி. ஆம்ஆத்மி கட்சியை வீழ்த்த முடியாமல் 4 தலைவர்களை பிரதமர் மோடி சிறையில் அடைத்தார்.
ஆம்ஆத்மி மட்டும் தான் நாட்டுக்கு நல்ல எதிர்காலம் தரும் என பிரதமர் மோடி நம்புகிறார். கடந்த 75 ஆண்டுகளில் ( Kejriwal ) ஆம்ஆத்மி போல் எந்த கட்சிக்கும் தொல்லை கொடுக்கப்பட்டது இல்லை என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.