மருத்துவக் கழிவுகளை கையாள்வதில் கேரள அரசு தோல்வி அடைந்துள்ளதாக கேரள உயர்நீதிமன்றம் கடும் காண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் குறித்து வரும் ஜனவரி 10-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Also Read : கட்டாய தேர்ச்சியை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு..!!
அபாயகரமான மருத்துவ கழிவுகளை நெல்லை மாவட்டத்தில் கொட்டுவதால் அங்கு சுற்றுசூழல் பாதிக்கப்படும் எனவும் அம்மாநில அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
மாநிலம் விட்டு மாநிலம் சென்று மருத்துவ கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருவதாக தமிழக அரசு சார்பில் புகார்கள் பெறப்பட்ட நிலையில் . தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் கேரள அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.