சக மாணவனால் குத்தி கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி – கேரளாவில் நடந்த சோகம்

kerala-women-murdered-in-college

கேரளாவில் செயின்ட் தாமஸ் கல்லூரியில் பயிலும் மாணவியை சக மாணவன் சரமாரியாக குத்தி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் தலையோலபரம்பு என்ற பகுதியை சேர்ந்தவர் 22 வயதான நித்தினா மோல். இவர் கோட்டயம் பாலா பகுதியில் உள்ள செயின்ட் தாமஸ் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு சமையல் கலைப் படிப்பு பயின்று வருகிறார்.
அதே கல்லூரியில் எர்ணாகுளம் பகுதியைச்  சேர்ந்த அபிஷேக் பைஜு என்ற மாணவரும் பயின்று வந்துள்ளார்.

kerala-women-murdered-in-college
kerala women murdered in college

இந்நிலையில் இன்று காலை கல்லூரி வளாகத்தில் மாணவி நித்தினாவை பேப்பரை வெட்ட பயன்படுத்தும் கட்டரை கொண்டு அபிஷேக் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த மாணவி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில், அபிஷேக்கை பிடித்த மாணவர்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து அபிஷேக்கிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் இருவரும் காதலித்து வந்ததாகவும் இந்த காதலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

Total
0
Shares
Related Posts