சூர்யாவின் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.
இயக்குநர் தா.செ.ஞானவேல் எழுதி இயக்கும் ’ஜெய் பீம்’ படத்தை சூர்யா தயாரித்து நடிக்கிறார். இப்படத்துக்கு, ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார். கர்ணன் படத்தில் நாயகியாக நடித்த ரஜிஷா விஜயன் இந்த படத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், வரும் நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘ஜெய் பீம்’ வெளியாகிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தீர்ப்பு வழங்கிய ஒரு வழக்கினை மையமாக வைத்தே இந்த படம் சொல்லப்படுகிறது.