நான்கு பேரை கொன்ற புலியை பிடிக்கும் பணியில் சிப்பிப்பாறை நாய்

Chippiparai breed dog to help finding out in Man eater tiger in Nilgris
Spread the love

கூடலூரில் நான்கு பேரை தாக்கிக் கொன்றுள்ள புலியைச் பிடிக்க வனத்துறை, காவல்துறை மற்றும் அதிரடிப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கூடலூரில் T23 புலியைச் சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அதனைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. வனத்துறை, காவல்துறை மற்றும் அதிரடிப்படையை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் 7 நாட்களாக வனத்துறையினரின் பிடியில் சிக்காமல் இருந்த புலியைக் கண்டறியும் பணியில் முதன்முறையாக சிப்பிப்பாறை இனத்தைச் சேர்ந்த எட்டு மாத நாய் பயன்படுத்தப்படுகிறது. சந்தனமரக் கடத்தலில் ஈடுபட்டோரை கண்டறிவதில் உதவி புரிந்த அதவை என்ற பெண் நாய், புலியைக் கண்டறிவதற்கு உதவி புரியும் என்று வனத்துறை கூறியுள்ளது.

Chippiparai-breed-dog-to-help-finding-out-in-Man-eater-tiger-in-Nilgris
Chippiparai breed dog to help finding out in Man eater tiger in Nilgris

இது குறித்து தெரிவித்த வனத்துறையினர்புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சி செய்யப்படும் என்றும் அந்த முயற்சி தோல்வியடைந்தால் சுட்டுக்கொல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.


Spread the love
Related Posts