கேரளாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் உயிரிழந்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய குருவாயூரை சேர்ந்த 22 வயதுடைய நபருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து கடந்த 27ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இளைஞரின் மாதிரிகள் ஆலபுழாவில் உள்ள தேசிய வைரலாஜி மையத்துக்கு அனுப்பப்பட்டு பரிசோதனை நடைபெற்று வந்த நிலையில், அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கேரள அரசு தெரிவித்துள்ளது.