அயர்லாண்ட் நாட்டின் நட்சத்திர ஆல்ரவுண்டர் கெவின் ஓ பிரைன்( kevin o brien ) கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவருக்கு வயது 37. அயர்லாந்து நாட்டிற்காக இவர் முதன் முதலில் 2006 ஆம் ஆண்டு களம் இறங்கினார் இதுவரை 153 ஒருநாள் போட்டியில் பங்கேற்றுள்ளார், 110 டி20 போட்டிகளில் பங்கேற்று சுமார் 5850 ரன்கள் அடித்துள்ளார் மேலும் அவரது பந்து வீச்சால் மொத்தம் 172 விக்கெட்களை கைபற்றியுள்ளார்.
இவரது அதிரடி ஆட்டத்தால் 2011 உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டதில் அயர்லாண்ட் அணி மாபெரும் வெற்றி பெற்றது, அந்த போட்டியில் இங்கிலாந்து அணி 321 ரன்கள் குவித்தது, 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 111 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது, 6 வது விக்கெட்டிற்கு கலம் இறங்கிய கெவின் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை சிதரடிதார், 31 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த அவர் அதன் பின்னர் பவுண்டரி சிக்ஸர்களாக விளாசினார்.. 50 பந்துகளில் சதமடித்தார்.. இந்த உலக கோப்பை போட்டியில் அதிவேகமாக சதமடித்த முதல் நபர் என்ற பெயர்பெற்றார். மொத்தமாக 113 ரன்கள் எடுத்து அவுட் ஆனார் பின்னர் வந்த வீரர்கள் மீதம் இருந்த ரன்களை அடித்து உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தினர். இதன் பெரும் பங்கு கெவின் ஓ பிரைனிர்கே சேரும்.தனது அறிக்கையில் அவர் கூறிவுள்ளதாவது “பதினாறு ஆண்டு கால பயணத்துக்கு பிறகு இன்றுடன் கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன். நாட்டிற்காக விளையாடிய ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக அனுபவித்து விளையாடினேன் என்றார். வாழ்வில் அடுத்த கட்டத்துக்கு நகர இதுதான் சரியான தருணம் என்றும் தன் சொந்த கிரிக்கெட் அகடெமியில் பயிற்சியாளராக செயல்படவுள்ளதாக கூறியுள்ளார்”.