புதுச்சேரி பட்ஜெட் முக்கிய அம்சங்கள் :
ஆதிதிராவிட, பழங்குடியின முதியோர், விதவை, முதிர்கன்னி, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு தற்போது தரப்படும் ஓய்வூதியத்துடன் ரூ.500 கூடுதலாக தரப்படும்.
பெற்றோரை இழந்த ஆதிதிராவிட 3 பழங்குடியின குழந்தைகளுக்கு 18 வயது வரை கல்வி, அடிப்படை தேவைகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் தரப்படும்.
இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தற்போது தரப்படும் ரூ.5,000 இனி ரூ.8,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். முதுகலை படிப்போருக்கு தரப்படும் ரூ.6,800 இனி .ரூ.9,800 ஆக உயர்த்தப்படும்.
Also Read : டாஸ்மாக் ஊழல் பணம் ரூ.1000 கோடி யாருக்கு போனது? – அன்புமணி ராமதாஸ் ஆவேசம்..!!
வரும் நிதியாண்டு முதல் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு இலவச அரிசியோடு 2 கிலோ கோதுமை இலவசமாக தரப்படும்.
மதிய உணவுத்திட்டத்தில் வாரம் 3 நாட்களுக்கு தரப்படும் முட்டை வரும் கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளி நாட்களிலும் தரப்படும்.
அரசு பள்ளியில் படித்து நீட் பாடப்பிரிவுகளில் 10 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் அனைவருக்கும் = 100 சதவீதம் கட்டண விலக்கு தரப்படும்.
அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு * வரை படித்து, கல்லூரிகளில் இளநிலை படிக்கும் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு ஊக்குவிப்புத் தொகை இந்தக் கல்வியாண்டு முதல் தரப்படும்.