தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு (kl rahul injury) வரும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல் தரம்சாலா போட்டியில் இருந்தும் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகின் அதிக கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட நம் பாரத நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தீவிரமாக விளையாடி வருகிறது .
இங்கிலாந்து அணிக்கு எதிராக ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல்,பங்கேற்றார் .
எல்லாம் நல்லபடி சென்றுகொண்டிருக்க போட்டியின்போது தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் ராகுல் பங்கேற்காமல் ஓய்வில் இருந்தார் .
இந்நிலையில் இந்த காயத்தால் அவதிப்பட்டு வரும் ராகுல் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் தான் என கூறப்படுகிறது .
Also Read : https://itamiltv.com/icc-test-ranking-jaiswal-moves-up-to-12th-position/
இந்த தொடர் முடிந்த கையோடு ஐபிஎல், டி 20 உலகக் கோப்பை மற்றும் வங்கதேசம், நியூஸிலாந்து, ஆஸ்திரேலிய
அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் அடுத்தடுத்து நடைபெற உள்ளதால் அதற்குள் கே.எல்.ராகுல் குணமடைந்து முழு உடற்தகுதியை எட்ட முனைப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கயாதால் அவதி பட்டு வரும் கே.எல்.ராகுல் பூரண நலம் பெற்று மீண்டும் களம் காண அவரது ரசிகர்கள் பிராத்தனை செய்து வருவதாக இணையத்தில் பல புகைப்படங்களை நம்மால் பார்க்க முடிகிறது.
ரசிகர்களின் பிராத்தனையால் ராகுல் குணமடைந்து (kl rahul injury) விரைவில் அணிக்கு திரும்புவாரா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.