கலைஞர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழா வரும் 18ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த விழாவில் பங்கேற்க்க முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ருபாய் 100 நாணயம் வெளியீட்டு விழா வரும் 18ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இவ்விழாவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட உள்ளார்.
Also Read : மிரட்டலான ஆக்சன் காட்சிகளுடன் வெளியானது “கங்குவா” திரைப்படத்தின் ட்ரைலர்..!!
இதுமட்டுமின்றி இந்த நாணய வெளியீட்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் புகழை போற்றும் வகையில் இந்த வருடம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது, அதன் ஒரு பகுதியாக வரும் இந்த ருபாய் 100 நாணயம் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளும் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் மும்மரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.