சீனாவின் தென்கிழக்கு மாகாணமான குவாங்டாங்கில் உள்ள மழலையர் பள்ளியில் திங்கள்கிழமை நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் பலியான நிலையில், ஒருவர் காயமடைந்தார்.
இந்த விவகாரத்தில், லியான்ஜியாங்கில் இருந்து வு என்ற 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்,
சம்பவத்தன்று காலை 7.40 மணியளவில் நடந்த இந்த தாக்குதலில் ஒரு ஆசிரியர், இரண்டு பெற்றோர்கள் மற்றும் மூன்று மாணவர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் உள்நோக்கத்துடன் நடந்துள்ளது என லியான்ஜியாங் கவுன்டி காவல் துறையினர் கூறியுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. சீனாவில் பொதுமக்கள் இதுபோன்று ஆயுதங்களை வைத்திருப்பதற்கு கடுமையாக தடை விதிக்கிறது.
சமீப காலங்களாக அமெரிக்க ராணுவம் நாடு முழுவதும் பள்ளிகளை குறி வைத்து தாக்குதல்கள் நடத்துவது அதிகரித்து உள்ளது.
இதனால், பள்ளிகளை சுற்றி காவல் துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். முன்னதாக, கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜியாங்சி மாகாணத்தில் கத்தியுடன் புகுந்த மர்ம நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில், 3 பேர் உயிரிழந்த நிலையில், 6 பேர் காயமடைந்தனர்.