KPY Bala -நடிகர் விஜய் எதை செய்தாலும் யோசிக்காமல் செய்யமாட்டார் என நடிகர் பாலா கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் தற்போது நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றமான தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளது குறித்து பரவலாக பேசப்பட்டு வரும் முக்கியமான ஒன்று.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கவுள்ளார் என்ற செய்திகள் ஏற்கனவே பல ஆண்டுகள் ஊடகங்களில் வெளியாகி வந்த நிலையில்,
இரண்டு தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என பெயர் வைத்து அதிகாரப்பூர்வமாக தனது அரசியல் கட்சியை அறிவித்தார்.
இவரது அரசியல் வருகைக்கு அரசியல் தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை வாழ்த்துக்களையம் அரசியல் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ,நடிகர் விஜய் எதை செய்தாலும் யோசிக்காமல் செய்யமாட்டார் என விஜய் டிவி குக் வித் கோமாளி நடிகர் பாலா தெரிவித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது .
மயிலாடுதுறை மாவட்டம் லட்சுமிபுரம் பகுதியில் தனியார் பள்ளி ஆண்டு விழா யூத் அண்ட் இந்தியா என்ற தலைப்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அயோத்தி திரைப்பட இயக்குனர் மந்திரமூர்த்தி, பிரபல நகைச்சுவை நடிகரும், சமூக ஆர்வலருமான குக் வித் கோமாளி பாலா சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மாணவர்களிடம் பேசினர்.
இதனை தொடர்ந்து பாலாவுடன் பள்ளி சிறுவர், சிறுமியர் போட்டி போட்டுக் கொண்டு செல்பி எடுத்தனர்.
இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1754407296912785632?s=20
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாலா, தான் தொடர்ந்து மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஆம்புலன்ஸ்கள் வாங்கி தந்துள்ளேன்.
இதுவரை 5 ஆம்புலன்ஸ்கள் வாங்கிய நிலையில் மீதமுள்ள ஐந்தையும் விரைவில் வாங்கி தருவேன்.
நடிகர் விஜய் அரசியல் ஆரம்பித்தது குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர், விஜய் எதை செய்தாலும் யோசித்து தான் செய்வார்.
தனக்கு அரசியல் ஆசை எதுவும் கிடையாது, என்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதற்கு நிறைய செலவு செய்கின்றனர்.
அதை என்னிடம் கொடுத்தால் வசிக்கும் முதியோர்களுக்கு மருந்து மாத்திரை வாங்கி தர முடியும் என்று(KPY Bala) பாலா தெரிவித்தார்.