கடந்த சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளை (chennai hc) சரிபார்த்து மறு எண்ணிக்கை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அதிமுக எம்.எல்.ஏ. அசோக்குமார் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் செங்குட்டுவன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் . கிருஷ்ணகிரி தொகுதியில் நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளை 20 நாட்களில் சரிபார்த்து எண்ணி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
Also Read : https://itamiltv.com/affair-girl-murder-by-affair-boy/
இதுமட்டுமின்றி மறு எண்ணிக்கைக்கு தேவையான உதவிகளை வழங்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
எதிர்வரும் மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் (chennai hc) அரசியல் மற்றும் தேர்தல் தொடர்பான வழக்குகள் சமீப காலமாக ஒவ்வொன்றாக முடித்து வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.