செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி 800 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் செல்வக்குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது .
தென் தமிழகத்தில் பெய்த வரும் வரலாறு காணாத பேய் மழையின் காரணமாக ஊருக்குள் வெள்ளம் சூழ்ந்தது . இதன்காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சுமார் 800 பயணிகள் கொண்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டு மூன்று நாட்களுக்கு பின் ரயிலில் உள்ள பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பெருவெள்ளத்தால் தாதன் குளம் அருகே தண்டவாளம் அந்தரத்தில் தொங்கியதை பார்த்த செல்வக்குமார், உரிய நேரத்தில் தகவல் கொடுத்ததால் ஸ்ரீவைகுண்டத்திலேயே செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் உரிய நேரத்தில் திருச்செந்தூர் ரயிலை நிறுத்தி 800 பயணிகள் உயிரை காப்பாற்றிய தண்டவாள பராமரிப்பாளர் செல்வக்குமார் என்பவருக்கு ரயில்வே துறைசார்பில் பாராட்டு தெரிவித்து அவருக்கு ரூ.5,000 சன்மானமாக கொடுக்கப்பட்டது.