ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட ‘லாபட்டா லேடீஸ்’ திரைப்படம் ஆஸ்கர் ரேஸில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திரையுலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதை பெற உலகில் இருக்கும் அணைத்து திரை பிரபலங்களும் தனது ஒவ்வரு படத்திலும் அயராத உழைப்பை போட்டு வருகின்றனர்.
அந்தவகையில் எதிர்வரும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் எந்தெந்த திரைபிரபலங்கள் இந்த உயரிய விருதை பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏகபோகமாக நிலவி வருகிறது.
Also Read : அழுகிய முட்டை அமைச்சர் – அமைச்சர் கீதா ஜீவன் மீது அண்ணாமலை காட்டம்..!!
ஒவ்வரு இந்த விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் கோலாகலமாக தொடக்கி நடைபெறும்.
இந்நிலையில் இந்த விருது வழங்கும் பட்டியலில் பல நாடுகளை சேர்ந்த பல திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இந்தியா சார்பிலும் சில திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட ‘லாபட்டா லேடீஸ்’ திரைப்படம், சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் அடுத்த கட்டத்திற்கு தேர்வாகவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.