Rajinikanth Salary –லால் சலாம் படத்துக்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் தொகை குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
3, வை ராஜா வை, ஆவணப் படமான சினிமா வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தற்பொழுது உருவாகி வரும் படம் தான் லால் சலாம்.
ஹீரோவாக இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
இந்த படத்தில் ,விஷ்ணு விஷால், விக்ராந்த் ,நடிகைகள் தன்யா ராஜேந்திரன், நிரோஷா, ஜீவிதா, நடிகர்கள் தம்பி ராமைய்யா, செந்தில், கிரிக்கெட் வீரட் கபில் தேவ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். முன்னதாக லால் சலாம் பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. கடந்த ஜன.26ஆம் தேதி லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.
வரும் பிப்ரவரி 9ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க :CAA Act- ” ஸ்டாலினுக்கு வெறும் அரசியல் பேச்சு மட்டுமே.. ”நாராயணன் திருப்பதி பதிலடி!
லால் சலாம் டீசர்:
நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில் மும்பை தாதாவாக நடித்துள்ளார்.
விஷ்ணு விஷால், விக்ராந்த் என கிரிக்கெட் போட்டியாளர்களிடையே நடக்கும் மத அரசியலை கேள்வி கேட்பது போல இப்படத்தின் டீசர் வெளியாகி ஏற்கெனவே வரவேற்பைப் பெற்றது.
மேலும் ரஜினிகாந்தின் மொய்தீன் பாய் க்ளிம்ஸ் வீடியோவும் வெளியாகி இணையத்தில் வைரலானது.
இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1753278473039491261?s=20
இந்நிலையில், மகளின் லால் சலாம் படத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் குறித்த விவரம் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி கௌரவத் தோற்றத்தில் தான் நடித்த மொய்தீன் பாய் கதாபாத்திரத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.40 கோடி சம்பளம் வாங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ஜெயிலர் படத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.110 கோடி சம்பளம் வாங்கியதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோல் என்பதால் ரஜினிகாந்த் தன் சம்பளத்தை (Rajinikanth Salary)பாதிக்கும் மேல் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.