உலகம் முழுவதும் தற்போது பரவி வரும் ஜெ.என்.1 என்ற புதிய வகை கொரோனா தொற்று குறித்து மத்திய சுகாதாரத்துறை லேட்டஸ்ட் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது .
நமது நாட்டின் பக்கத்துக்கு நாடான சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் கொரோனா என்னும் கொடிய நோய் தொற்று உலகெங்கும் பரவ தொடங்கியது . சிறியவர் பெரியவர் என பாரபட்சமின்றி தாக்குதல் நடத்திய இந்த வைரஸ் தோற்றால் கோடான கோடி பேர் உயிரிழந்தனர் .
இதையடுத்து கடந்த ஓராண்டாக கட்டுக்குள் இருந்து வரும் இந்த கொடிய வைரஸ் தொற்று மீண்டும் தலை காட்ட ஆரம்பித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அந்தவகையில் தற்போது இந்தியாவில் பரவி வரும் ஜெ.என்.1 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் திடீரென அதன் பரவலை வேகப்படுத்தியுள்ளது .
இந்நிலையில் இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது :
புதிய வகை கொரோனாவால் காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, உடல்வலி உள்ளிட்ட பாதிப்புகள் மட்டுமே ஏற்படுகின்றன.உயிரிழப்பு, ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருக்கிறது. புதிய வகை கொரோனா பரவல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை.
பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும். வைரஸ் பரவலை தடுக்க மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஜெ.என்.1 வகை கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவையில்லை. குளிர்காலம் என்பதால் ஜெ.என்.1 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.
இதன் வீரியம் குறைவுதான். பாதிக்கப்படுவோர் ஒரு வாரத்தில் முழுமையாக குணமடைந்து பழைய நிலைக்கு திரும்பிவிடுவார்கள் என மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.