ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த, தனது தம்பி நல்லதம்பியை, அண்ணன் முத்துராஜ் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைன் ரம்மியால் பல லட்ச ரூபாய் பணத்தை நல்லதம்பி இழந்ததுடன், தனது அண்ணன் முத்துராஜிடம்73 லட்சம் கடனாக வாங்கி அதையும் ஆன்லைன் ரம்மியில் இழந்துள்ளார்; மேலும் வீட்டை விற்று, மேலும் பணம் தரும்படி கேட்டதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக முத்துராஜ் போலீசில் சரணடைந்தார்.
மேலும் இந்த சம்பவம் தமிழ் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா கொண்டு வந்தும் அந்த தடை செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு 48 பேர் தற்கொலை செய்துகொண்டதாக தரவுகள் சொல்கின்றன. நாட்கள் செல்ல செல்ல ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலைகள் அதிகமாகி கொண்டே செல்கிறது.
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மியால் பறிபோகும் ஒவ்வொரு உயிருக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவி தான் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும்”- காங்கிரஸ் சட்டபேரவை குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியீட்டுள்ளார். அதில்,
தமிழ்நாடு ஆளுநர் அவர்களே, உயிர்குடிக்கும் ஆன்லைன் ரம்மியால் மீண்டும் ஒரு உயிர் கொலையில் பறிபோயுள்ளது. இன்று (02.04.2023) துாத்துக்குடி மாவட்டம், சில்லாநத்தம் கிராமத்தில் லாரி டிரைவர் நல்லதம்பி பல லட்சம் ரூபாயை ஆன்லைன் ரம்மியால் இழந்த நிலையில் தனது அண்ணனிடம் 3 லட்சம் கடன் வாங்கி அதையும் இழந்துள்ளார்.

இதனால், அண்ணன் அவரது தம்பி நல்லதம்பியை அடித்து கொன்றுள்ளார் என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.
தமிழ்நாடு மக்கள் மீது சிறிதும் அக்கறை இல்லாத ஆளுனருக்கு இன்னும் எத்துனை உயிர்கள் ஆன்லைன் ரம்மியால் பறிப்போனபின் கருணை உள்ளம் பிறக்கும்?
அரசியல் சட்டத்தையும், தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்த அரசையும், மாண்புமிக்க சட்டமன்றதையும் மதிக்காத ஆளுநர் தமிழ்நாட்டுக்கு தேவையா? உடனடியாக ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும், இல்லையென்றால் ஒன்றிய அரசு ஆளுநரை திரும்ப பெற வேண்டும்.
ஆன்லைன் ரம்மியால் பறிபோகும் ஒவ்வொரு உயிர் பலிகளுக்கும் ஆளுநர் அவர்கள்தான் முழுவதுமாக பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.