தளபதி விஜய்யின் மாஸான நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் 2வது பாடலுக்கான புரொமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படத்தில் தளபதி விஜய் உடன் த்ரிஷா , கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .
செவன் ஸ்கிரீன் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார் . பல முன்னணி கலைஞர்களின் அயராத உழைப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘நான் ரெடி’ பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த நிலையில் . தற்போது லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது .
‘BADASS’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு புரொமோ ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.