கோத்தகிரி அருகே அதிகாலை நேரத்தில் சாலையில் சிறுத்தை (leopard) ஒன்று உலா வந்ததால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில மாதங்களாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிரித்து வருகிறது. இந்தநிலையில், கோத்தகிரி அருகே அரவேனு பெரியார் நகர் கிராமத்தில் சிறுத்தை (leopard) ஒன்று தொடர்ந்து உலா வந்த வண்ணம் உள்ளது.
அந்த காட்சி அங்குள்ள வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதனால், கிராம மக்கள் அச்சமடைந்து உள்ளனர். மேலும், அவர்கள் இரவு நேரத்தில் வெளியே நடந்து செல்லும் போது சிறுத்தை தாக்கி விடுமோ என்ற அச்சம் காரணமாக வீட்டில் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே, சிறுத்தை தாக்கி பொதுமக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.