Parantur Airport 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையினை புதன்கிழமை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ஜி.எஸ்.டி சட்டத்தில் திருத்தம், மாநிலங்கள் சுயாட்சி பெறும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும், ஆளுநர்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் சட்டப்பிரிவு நீக்கப்படும் என்பது உள்பட பல்வேறு வாக்குறுதிகள் வெளியிடப்பட்டது. இந்த வாக்குறுதிகள் தமிழக மக்கள் மத்தியில் கலவையான கேள்விகளையும், விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில், தேர்தல் அறிக்கை மூலம் திமுக தனது இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியிருப்பதாக கண்டனம் தெரிவித்திருக்கிறார் பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்ட எதிர்ப்புக்குழு உறுப்பினரும், ஏகனாபுரம் கிராமத்தின் மண்ணின் மைந்தரும், எழுத்தாளருமான பவா சமத்துவன்.
இதையும் படிங்க: ஸ்டாலின் அறிவித்த இந்த புதுமுக வேட்பாளர்கள் யார் தெரியுமா? முழு விபரம்!!
மக்களவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால்,
திமுக அங்கம் வகிக்கும் “இந்தியா” கூட்டணி ஆட்சி அமைத்தால் , தமிழகத்தில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என இந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் – விமான நிலையங்கள் என்ற பகுதியில் தமிழகத்தை பொறுத்த வரை ,
சென்னை – திருச்சி –கோவை – தூத்துக்குடி போன்ற விமான நிலையங்கள் விரிவுபடுத்தப்படும் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது .
மேலும் – மாவட்டங்கள் தோறும் எத்தகைய திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்ற பகுதியில் , காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பரந்தூர் புதிய விமான நிலைய திட்டம் பற்றி ஒரு வார்த்தையும் குறிப்பிடப்படவில்லை. மத்திய அரசின் துணையோடு தமிழக அரசு முன்னெடுத்து வரும் 35 ஆயிரம் கோடி ரூபாய் திட்டம் பற்றி ஏன் திமுகவின் தேர்தல் அறிக்கை வாய் திறக்கவே இல்லை..?
இதையும் படிங்க: திமுக எம்.பிக்கள் 7 பேருக்கு கல்தா – இதுதான் காரணம்!!
பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து போராடிவரும் மக்களை இதைவிட வேறு எப்படி அவமதிக்க முடியும் ..? தங்கள் வாழ்வாதாரத்தை காக்க போராடும் மக்களை பற்றி அக்கறையில்லாமல், எந்த முகத்தோடு நீங்கள் இப்போது மக்களை சந்திக்க வருவீர்கள்..? பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கட்டப்பட இருக்கும் மேம்பாலங்கள் பற்றி கூறும் திமுக தேர்தல் அறிக்கையில், தமிழகத்தின் பெருந்திட்டமாக நீங்கள் கூறும் பரந்தூர் விமான நிலைய திட்டம் பற்றி ஏதும் கூறாமல் மௌனம் காப்பதன் “இரகசியம்” என்ன..? இது எந்த வகையான “ஜனநாயகம்” என்பதை தமிழக முதல்வர் தான் கூற வேண்டும்..?
விவசாயத்தை காப்போம்; விவசாயிகளைக் காப்போம் என்றெல்லாம் குரல் கொடுத்துக் கொண்டே பரந்தூர் விமான நிலையத்திட்டத்துக்காக விவசாயிகளை அடியோடு அழிப்பது திமுகவின் இரட்டை வேடம்தான் என்றும் பவா சமத்துவன் கூறியுள்ளார்.